வெளியாகிறது சூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக்!! தேதி உள்ளே!

தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

Last Updated : Feb 28, 2018, 03:01 PM IST
வெளியாகிறது சூர்யா 36 படத்தின் பர்ஸ்ட் லுக்!! தேதி உள்ளே! title=

தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது வரை இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை, அதனால் தற்காலிமாக சூர்யா 36 என்ற பெயரில் இப்படம் தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. 

இந்நிலையில் சூர்யா-ன் 36வது படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் 5-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

 

 

Trending News