Thiruvathirai 2023: திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பெளர்ணமி நாளில் விரதம் இருப்பதைக் குறிக்கும் நன்னாள். திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளான மார்கழித் திருவாதிரை சைவ மதத்தில் மிகவும் முக்கியமான நாள். அதற்குக் காரணம், சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை எனபதே ஆகும்.
சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜ பெருமான் தரிசனம், வாழ்வில் வளம் சேர்க்கும். திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். கணவனின் நீண்ட ஆயுளுக்காக சுமங்கலி பெண்கள் விரதம் இருப்பதும், புது தாலிச் சரடு கட்டி கொள்வதும் விசேஷம்.
திருவாதிரை விரதம் இருக்கும் முறை
திருவாதிரை விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து உணவு உண்ணாமல் விரதம் இருந்து சிவாலயத்திற்கு சென்று எம்பெருமான் சிவனை வழிபட வேண்டும். அந்தி மயங்கிய பிறகு, வானில் சந்திரன் வந்த பிறகு, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அவருக்கு அருகம்புல் சாற்றி விபூதி,சந்தனம், குங்குமம் இட்டு விநாயகர் முன் மாங்கல்ய சரடுகள் வைக்கவேண்டும்.
18 வகை காய் சேர்த்து கூட்டு செய்வதும், திருவாதிரைக் களி செய்வதும் இந்த நோன்பு கடைபிடிப்பவர்கள் செய்ய வேண்டும். அதன் பிறகு முறையாக படையல் இட்டு, அதன் பிறகு விரதத்தை முடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | தைப் பொங்கல் மாதத்தில் 8 பெயர்ச்சிகளில் பணம் கொடுக்குமா சனி பெயர்ச்சி?
வரமருள்வாள் பார்வதி தேவி
இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவ பார்வதியின் அருள் கிடைக்கும். தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு முடித்த பிறகு, சிவ ஆலயம் சென்று ஆருத்ரா தரிசனம் பார்க்கலாம். திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு பார்வதி தேவியின் அருள் கிடைத்து, சுமங்கலியாக இருக்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நாளன்று தரிசனம் செய்வது பிறவிப் பிணிகளைப் போக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரையில் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்வது சிறப்பு.
அபிஷேகப் பிரியரான சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், திருவாதிரைக் களி செய்து நோன்பிருந்து, ஆருத்ரா தரிசனம் செய்வதும், எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். அந்த ஆற்றலை அன்னை சக்தி, சக்தியாக மாற்றித் தருவாள் என்பது சைவர்களின் நம்பிக்கை.
மேலும் படிக்க | நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ