போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..

How To Remove Permanant Stains : சிலர், தங்களது துணியில் இருக்கும் போகாத கரையை எப்படி போக்குவது என முழித்துக்கொண்டிருப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ.  

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2024, 05:39 PM IST
  • வெள்ளை உடையில் கறையா?
  • கறைகளை நீக்க டிப்ஸ்
  • துணியை ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்கள்!
போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’  வாஷ் செய்து பாருங்க.. title=

How To Remove Permanant Stains : பிடித்த ஆடைகளை அணிந்து கொண்டு எங்காவது மகிழ்ச்சியாக வெளியில் செல்கையில், நமது மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் ஆடையில் ஏதேனும் கறைபட்டு விடும். சரி அதை கழுவிக்கொள்ளலாம் என தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு அலசினால் அந்த கறை அப்போதும் போகாது. அது புதுத்துணியாக இருந்து விட்டால் இன்னும் மோசம். அது வெள்ளை ஆடையாக இருந்து விட்டால் அழுகையே வந்து விடும் இல்லையா? அப்படி, நீங்காத கரையை ஆடையில் இருந்து நீக்க சில டிப்ஸ் இருக்கிறது. அதை இங்கு பார்ப்போம். 

விரைவில் சுத்தம்:

எந்த கலர் ஆடையை உடுத்தினாலும், அதில் கறை பட்டுவிட்டால் அது பட்ட ஐந்தே நிமிடங்களுக்குள் அதை நீக்க முயற்சி செய்ய வேண்டும். முழுமையாக அந்த கறை நீங்கவில்லை என்றாலும், கறை ஆழமாவதை தவிர்க்கலாம். இதனால், அடுத்த வாஷில் அந்த கறையை விரைவில் நீக்கலாம்.

ஹைட்ரோஜைன் பெராக்சைட்:

ஹைட்ரோஜைன் பெராக்ஸைட், ஆடையில் இருக்கும் கறைகளை விரைவில் நீக்க உதவுகிறது. சட்டையில் இருக்கும் காலரில் அழுக்கு கறை இருந்தால் அதை 30 நிமிடங்கள் ஹைட்ரோஜைன் பெராக்ஸைடில் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை சோப் போட்டு துவைக்கவும். அப்படி செய்தால் அந்த துணி புத்தம் புதியதாக மாறிவிடும். 

மேலும் படிக்க | துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவை கேக் செய்ய மட்டும் உபயோகிக்க வேண்டாம். கறைகளை நீக்கவும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை, பேக்கிங் சோடாவை ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த கலவையை கறை பட்ட இடத்தில் நன்றாக தேய்த்து நீரில் அலச வேண்டும். பின்பு, ஏற்பட்ட கறை நீங்கி விடும். 

ஆல்கஹால்:

துணியில் இருக்கும் நிறந்தர கறைகளை நீக்க, ஆல்கஹாலை பயன்படுத்தலாம். துணி துவைப்பதற்கு முன்பு, ஐந்து நிமிடம் ஆல்கஹாலை கறை இருக்கும் இடத்தில் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்பு அதன் மீது நன்றாக கேட்க வேண்டும். அதன் பிறகு சோப்பு போட்டு தோய்த்தால் அந்த கறைகள் போய்விட வாய்ப்பிருக்கிறது. 

வினிகர்:

எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை முதலில் அரை பக்கெட்டில் கலந்து கொள்ள வேண்டும். இதில், கறைப்பிடித்த துணிகளை 1 மணி நேரம் ஊற வைத்து பின்பு நன்கு துவைக்க வேண்டும். இது, துணிக்கு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும். 

நீர் அவசியம்:

துணியில் கறைப்பட்டவுடன் உடனே அதை குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த கறை நீங்குவதோடு மட்டுமன்றி கறையும் விரைவில் நீங்கலாம். 

மேலும் படிக்க | துணிகளை ஒருமுறை பயன்படுத்தியதும் துவைக்க போடுவரா நீங்கள்! இத தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News