Property | பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ₹55 கோடி சொத்தை கொடுத்த பெண்

பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்கக்கூட தயங்கும் இந்த காலத்தில், ஒரு பெண் தனது தனது அண்டை வீட்டுக்காரர்களுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார் என்பது அதிசயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதை விட அதிசயமும் இந்த விஷயத்தில் நடந்திருப்பது மலைப்பைக் கொடுக்கிறது. காண்பது கனவா இல்லை நனவா என்று கையை கிள்ளிப் பார்க்கத் தோன்றுகிறது.

Last Updated : Dec 5, 2020, 08:01 PM IST
Property | பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ₹55 கோடி சொத்தை கொடுத்த பெண் title=

பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்கக்கூட தயங்கும் இந்த காலத்தில், ஒரு பெண் தனது தனது அண்டை வீட்டுக்காரர்களுக்கு 55 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார் என்பது அதிசயத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதை விட அதிசயமும் இந்த விஷயத்தில் நடந்திருப்பது மலைப்பைக் கொடுக்கிறது. காண்பது கனவா இல்லை நனவா என்று கையை கிள்ளிப் பார்க்கத் தோன்றுகிறது.

இது ஜெர்மனியில் நடந்த உண்மை சம்பவம். மத்திய ஜெர்மனியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு தான் 55 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை (house) பரிசாக கொடுத்தார் வீட்டின் சொந்தக்கார பெண்மணி. இப்படி யாருக்காவது அதிர்ஷ்டம் வருமா என்ன?  

உண்மையில் இந்த சொத்து ஒரு வயதான பெண்மணிக்கு சொந்தமானது. ரெனேட் வெடெல் (Renate Wedel)1975 முதல் மத்திய ஜெர்மனியின் Hesse என்ற பகுதியில் தனது கணவர் ஆல்ஃபிரட் வெடல் (Alfred Wedel) உடன் வசித்து வந்தார். 2014-இல் ஆல்ஃபிரட் இறந்தார்,. தனித்து வாழ்ந்து வந்த ரெனேட் 2019 டிசம்பரில் தனது 81 வயதில் இறந்தார்.

ரெனேட் (Renate) வசதியானவர். அவரிடம் வங்கி இருப்பு, பங்குகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் என கணிசமான சொத்துக்களை (property) வைத்திருந்தார்.  அவருடைய அசல் வாரிசான அவரது சகோதரியும் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இறுதியில் வீப்பர்ஃபெல்டன் (Weiperfelden) என்ற இடத்தில் உள்ள ஒரு சொத்து நகராட்சிக்கு கிடைத்தது. ஆனால் வீடு மற்றும் கட்டடங்கள், வளாகம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் சிரமமாக இருந்தது. எனவே, சொத்தை ஏற்பதற்கு நகராட்சியும் (municipality)தயக்கம் காட்டியது. பிறகு அந்தப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் பங்களிப்பு காரணமாக சொத்தை நகராட்சி எடுத்துக் கொண்டது.
€6.2 மில்லியன் மதிப்புள்ள சொத்து, "சமூக வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புக்கு" பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

Also Read | Eco Bridge: விலங்குகள் சாலையை கடக்க உதவும் பாதுகாப்புப் பாலம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News