விளாம்பழத்தால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள்...

விளாம்பழத்தால் நமது உடலுக்கு பல நன்மைகள் உருவாகின்றன. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 11, 2022, 01:54 PM IST
  • விளாம்பழத்தில் மனிதர்களுக்கு தேவையான ஆரோக்கியம் உள்ளது
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • வைட்டமின் பி-2 சத்து நிறைந்திருக்கிறது
 விளாம்பழத்தால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள்... title=

பழங்கள் மனித உடலுக்கு பொதுவாகவே நன்மை கொடுப்பவை. அதனால் அனைவருமே பழங்களை தவறாமல் சாப்பிடுவர். அப்படி உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பழங்களில் முக்கியமான ஒரு பழம் விளாம்பழம். இந்தப் பழங்களானது ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை கிடைக்கும். இதன் காய், பழம், மரப்பட்டை, இலை ஆகியவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். விளாம் காயை தயிருடன் சேர்த்து பச்சடிபோல் சாப்பிடலாம். வெல்லத்துடன் பிசைந்து உண்ணலாம். 

பனங்கற்கண்டுடன் சேர்த்தும் சுவைக்கலாம். கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம்பழம் காட்சியளிக்கும். ஓடுபோல இருக்கும் இதன் மேல் பகுதியை உடைத்துதான், உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட முடியும். மற்ற பழங்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக காட்சிதரும் இந்த விளாம்பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.

Wood Apple

விளாம்பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர் செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது. விளாம்பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். 

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்

புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்-ஏ உள்ளிட்ட சத்துக்களும், இதில் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி-2 உயிர் சத்தும் உள்ளது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மேலும் படிக்க | High Cholesterol: இந்த இடங்களில் வலி இருக்கா? ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம், ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News