தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.
1996-ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 18-வது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் இலக்கிய சிந்தனை விருது, எம்.ஜி.ஆர். விருது, என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருது, க.நா.சு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் அசோகமித்திரன்.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் அசோகமித்ரனின் மறைவிற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2017