சினிமாவில் உயரிய விருதுகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
விருதுக்கான படங்களை பரிந்துரை செய்யும் குழுவின் உறுப்பினர்களான இவர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களுக்கு வாக்களிக்க முடியும். இந்தச் சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகரும் இல்லை.
இந்நிலையில் கோலிவுட் நடிகரான சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு தற்போது கதவைத் தட்டியுள்ளது. தேர்வுக்குழுவில் இணைய அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 397 பிரபலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அந்த அழைப்பில், இந்தியா சார்பில் நடிகர் சூர்யாவுக்கு மட்டுமல்லாது பாலிவுட் நடிகை கஜோல், இயக்குநர் பான் நலின் மற்றும் ஆவணப்பட இயக்குநர் சுஷ்மிஷ் கோஷ் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் @mkstalin https://t.co/hkqUGRTCmV
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022
சூர்யா நடித்துத் தயாரித்து அண்மையில் வெளியான ஜெய்பீம் படம், ஆஸ்கருக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் விருதுப் பட்டியலில் அப்படம் பரிந்துரைக்கப்படாததால் விருது பெறும் வாய்ப்பை இழந்தது. விருது கை நழுவிப்போன இச்சூழலில், ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவிலேயே சூர்யாவுக்குத் தற்போது இடம் கிடைத்திருப்பது சினிமா வட்டாரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அந்த வகையில் பலரும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும்கூட ட்விட்டரில் சூர்யாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | மீனாவுக்குத் தூணாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் யார் தெரியுமா?
Thank you @TheAcademy for the invitation, which I humbly accept. My heartfelt thanks to all those who wished me, will always strive to make you all proud!! https://t.co/eyEK9hQxhF
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022
ஆஸ்கரிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட போதும் இதில் சூர்யாவின் நிலைப்பாடு பற்றி தெரியாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில் அதற்குத் தற்போது சூர்யாவே விடை அளித்துள்ளார்.
அந்த வகையில் ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சூர்யா, ஆஸ்கரின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ள அவர், ஆஸ்கர் அமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 'விக்ரம்' மட்டுமில்ல; சூர்யாவுக்குக் கமல் கொடுத்த 'ரோலக்ஸ்' வாட்ச்சும் புதிய சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR