'விக்ரம்' மட்டுமில்ல; சூர்யாவுக்குக் கமல் கொடுத்த 'ரோலக்ஸ்' வாட்ச்சும் புதிய சாதனை!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் உலகம் வசூல் மழை பொழிந்தது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 28, 2022, 03:49 PM IST
  • கமலின் விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல்.
  • சூர்யாவுக்குக் கமல் ரோலக்ஸ் வாட்ச் அளித்தார்
  • சூர்யாவின் ரோலக்ஸ் வாட்ச் பற்றிய பதிவு சாதனை
'விக்ரம்' மட்டுமில்ல; சூர்யாவுக்குக் கமல் கொடுத்த 'ரோலக்ஸ்' வாட்ச்சும் புதிய சாதனை! title=

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் உலகம் வசூல் மழை பொழிந்தது.

வியாபார ரீதியாக படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காரும் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு பைக்குகளும் பரிசாக வழங்கினார் கமல். அதேபோல இப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக அணிவித்து மகிழ்ந்தார் கமல்ஹாசன்.

கமல் நீண்ட நாட்களாகப் பயன்படுத்திவந்த அந்த வாட்ச்சை அணிந்துகொண்ட சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை ஷேர் செய்திருந்தார். அவரது அந்தப் பதிவு இணையத்தில் மிகவும் வைரல் ஆனது. அந்த வகையில் தற்போது 20 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது அந்தப் பதிவு. இதனால் இன்ஸ்டகிராமில் அதிக லைக்குகள் வாங்கிய கோலிவுட் நடிகரின் பதிவு எனும் சாதனையை இது படைத்துள்ளது.

இன்ஸ்டகிராமைப் பொறுத்தவரை பொதுவாக நடிகைகள்தான் அதிக லைக்குகள் வாங்குவார்கள். இந்த நிலையில் சூர்யாவின் பதிவொன்று இவ்வளவு லைக்குகளைப் பெற்றுள்ளது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்! - விஜய், அஜித்துக்கு எத்தனையாவது இடம்?

நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆண்டு தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அது 10 லட்சம் லைக்குகளை அள்ளிய நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு 10 லட்சம் லைக்ஸ் பெறும் முதல் கோலிவுட் நடிகர் எனும் சாதனையை தனுஷ் அப்போது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News