எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு!

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட ஆலன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 11, 2024, 06:55 PM IST
  • ஆலன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.
  • எட்டுத்தோட்டாக்கள் வெற்றி ஹீரோவாக நடித்துள்ளார்.
  • விரைவில் டீசர் வெளியாக உள்ளது.
எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் புதிய படம்! படப்பிடிப்பு நிறைவு! title=

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக  இப்படம் உருவாகியுள்ளது.  ஆலன் என்பதன் பொருள் படைபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.  

மேலும் படிக்க | Lal Salaam OTT: ‘லால் சலாம்’ படம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ்? இதோ முழு விவரம்!

வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்,  காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.  எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், திருநெல்வேலி இடங்களிலும், காசி உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் முழுப் படப்பிடிப்பையும்  நிறைவு செய்ததோடு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை துவக்கியுள்ளது.  இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

தொழில் நுட்பக்குழு விவரங்கள்:

தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் - 3S பிக்சர்ஸ் தயாரிப்பு , இயக்கம் - சிவா R
இயக்குநர் - சிவா R 
ஒளிப்பதிவு - விந்தன் ஸ்டாலின் 
இசை - மனோஜ் கிருஷ்ணா
கலை இயக்குநர் - K.உதயகுமார் 
ஸ்டண்ட் - மெட்ரோ மகேஷ் 
 நடனம் : ராதிகா & தஷ்தா

மேலும் படிக்க | தனுஷ்-அனிருத் நட்பில் விரிசல்!? காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News