மகளிர் தினம் ஸ்பெஷல்!!

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் மகளிர் மட்டும் படத்தின் "அடி வாடி திமிரா" என்ற பாடல் மகளிர் தினமான இன்று வெளியிட்டார் சூர்யா.

Last Updated : Mar 8, 2017, 03:37 PM IST
மகளிர் தினம் ஸ்பெஷல்!! title=

சென்னை: பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் மகளிர் மட்டும் படத்தின் "அடி வாடி திமிரா" என்ற பாடல் மகளிர் தினமான இன்று வெளியிட்டார் சூர்யா.

இப்படத்தை நடிகர் சூரியா தயாரித்து வருகிறார். தற்போது உருவாகி வரும் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். 

மேலும் ஜோதிகா நடித்து வரும் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தை தற்போது சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் 2D மியூசிக் நிறுவனம், தனது முதல் உரிமையாக 'மகளிர் மட்டும்' உரிமையை பெற்று, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஒரு பாடலையும் வெளியிட்டு உள்ளார். ஜிப்ரான் இசையில் "அடி வாடி திமிரா" என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News