Change Bad Luck Into Good Fortune In 2025: 2025ஆம் ஆண்டுக்குள் நுழைய இருக்கிறோம். பலருக்கு 2024ஆம் ஆண்டு படுத்தி எடுத்த ஆண்டாக இருந்திருக்கும். ஒரு சிலர், புத்தாண்டுக்குள் நுழையும் முன்னர் தங்களுடன் பலவித அதிர்ஷ்டங்களை எடுத்துக்கொண்டு செல்வர். ஒரு சிலர், தங்களிடம் இருந்த அதிர்ஷ்டத்தை விட்டுவிட்டு, துரதிர்ஷ்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வர். இதனால், “அடுத்த வருடம் நமக்கு என்ன நடக்க காத்திருக்கோ” என சிலர் இதனால் பயப்படுவதுண்டு. ஆனால், இதனை சில பரிகாரங்களை வைத்து நாம் மாற்றிவிடலாம். அந்த பரிகாரங்கள் என்ன தெரியுமா?
சுத்தமாக்கும் சடங்குகள்:
முதலில் சுத்திகரிக்கும் சடங்குகளை செய்ய வேண்டும் என சில குறிப்புகள் கூறுகின்றன. இதனால், நமக்குள் இருக்கும் நேர்மறை ஆற்றல்களை (negative energies) வெளியேற்ற முடியுமாம். உங்களை சுற்றி இருக்கும் சூழலை சுத்திகரிக்க, வீட்டில் தினமும் இரண்டு வேளை நெய் தீபம் ஏற்றலாம். காலை, மாலை ஏற்றுவது நல்லது. அத்துடன் ஊதுபத்தியையும் கொளுத்த வேண்டும். இதன் பிறகு உங்கள் உடலையும் மனதையும் சுத்திகரிக்க கல் உப்பு, துளசி உள்பட சில மூலிகைகள் சேர்த்து குளிக்க வேண்டும்.
நன்றியுணர்தல்:
தினமும், உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக ஆற்றலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பின்னர், உங்கள் வாழ்வை பாசிடிவாக பார்க்க முயற்சி செய்ய வேண்டும். தினமும் உங்களுக்கு கிடைத்துள்ள 3 நல்ல விஷயங்களை எழுதி வைக்க வேண்டும். அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அது உங்களுக்கு கிடைத்ததற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். இது, உங்களுக்கு நிறைந்த உணர்வை ஏற்படுத்த உதவும்.
அதிர்ஷ்ட பொருட்கள்:
தினமும் பாசிடிவாக யோசிக்க, உங்களுக்கு எந்த தெய்வத்தை பிடிக்குமோ அதன் குறியீட்டை தினமும் பாருங்கள். சிரிக்கும் புத்தர், காற்று மணி ஓசைகள், ஸ்வஸ்திக், ஓம் உள்ளிட்டவையும் நமக்கு நல்ல யோசனைகளை வழங்க உதவும். இவை, அதிர்ஷ்டத்திற்கும் உதவுவதாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் விஷயங்கள்:
தினமும் நீங்கள் செய்யும் விஷயங்களும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் விஷயங்களாக இருக்க வேண்டும். சின்னதாக ஒரு ஜாடியை வாங்கி வைத்து அதில் நீங்கள் எந்த அதிர்ஷ்டத்தை வரவழைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதனை ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள். அதில் தானியத்தை போட்டு மூடி, தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
கனிவு:
அதிர்ஷ்டம் கிடைக்க மட்டுமல்ல, பொதுவாக மனிதர்கள் அனைவருமே பிறரிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். எனவே, இல்லாதவர்களுக்கு கொடுத்து பழகுங்கள். கனிவாக பேசி நடந்து கொள்ளுங்கள். தொண்டு நிறுவனத்திற்கு உதவுங்கள். உதவி தேவைப்படுபவருக்கு கரம் நீட்டுங்கள். இது, அதிர்ஷ்டத்தை வரவைத்து நல்ல ஆற்றல்களை உங்கள் முன் நிறுத்தும்.
மேலும் படிக்க | 2024-ல் துரதிர்ஷ்டத்தை தலை முழுகும் 2 ராசிகள்! என்னென்ன தெரியுமா?
நிறங்களும் எண்களும்:
உங்களுக்கு எந்த எண் அதிர்ஷ்டத்தை தேடி தருகிறது என நினைக்கிறீர்களோ, அந்த எண்ணை அடிக்கடி உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம் கொடுக்கும் என நினைக்கிறீர்களோ, அந்த நிறத்தை உங்கள் வாழ்வில் பல இடங்களில் கொண்டு வாருங்கள். அப்போது அதிர்ஷ்டம் உங்களை தேடி தானாக வந்து விடும்.
உறுதிமொழிகள்:
2025ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்பு, நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் என்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளுங்கள். “எனக்கான அதிர்ஷ்டம் காத்துக்கொண்டுள்ளது. நான் எனக்கு தேவையான விஷயங்களை 2025ல் அடைவேன்” போன்ற வாக்கியங்களை உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்ள வேண்டும். அப்போது இந்த பிரபஞ்சமும் உங்கள் வார்த்தைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ