பைரவா- கேரளாவில் வசூலில் புதிய சாதனை

Last Updated : Jan 17, 2017, 09:24 AM IST
பைரவா- கேரளாவில் வசூலில் புதிய சாதனை title=

பைரவா படம் ரிலீஸான அன்று கேரளாவில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. 

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த 12-ம் தேதி 55 நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. தளபதி ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. 

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைரவா ரிலீஸான அன்று மட்டும் ரூ.10.4 லட்சம் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. பைரவா ஏரீஸ்பிளக்ஸ் தியேட்டரில் மலையாளம் அல்லாத பிற மொழி படம் ஒன்று ரிலீஸான அன்று ரூ. 10.4 லட்சம் வசூலித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். 

அந்த தியேட்டரில் ரிலீஸான அன்று அதிகம் வசூலித்த மலையாள படம் மோகன்லாலின் புலிமுருகன். புலிமுருகன் ரிலீஸான அன்று ஏரீஸ்பிளக்ஸில் ரூ. 8.5 லட்சம் வசூலித்தது. 

தெறி விஜய்யின் தெறி படம் ரிலீஸான அன்று ரூ.13 கோடி வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது பைரவா முறியடித்துள்ளது. பைரவா ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ. 92 லட்சம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News