இவர்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. இதோ உறுதியாக தகவல்

BB 7 Tamil Title Winner: நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா மூவரும் இணைந்த பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 1, 2024, 09:34 AM IST
  • கமல்ஹாசன் ஆரம்ப சீசனில் இருந்து தற்போது வரை தொகுத்து வழங்கி வருகிறார்.
  • இப்பாேட்டியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் (Raveena Daha Evicted).
  • கண்டிப்பாக பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான்.
இவர்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. இதோ உறுதியாக தகவல் title=

நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா மூவரும் இணைந்த பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், டைட்டில் வின்னர் யார் என்கிற தகவலை இவர்கள் பகிர்ந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7:
வெளிநாட்டில் நடைப்பெற்று வந்த ‘பிக் பிரதர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை காெஞ்சம் வேறு மாதிரி மாற்றி, இந்தியில் ‘பிக்பாஸ்’ என்ற ஷோவை 2007ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். இதனை, கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்து. தமிழைப்பொறுத்தவரை கமல்ஹாசன் ஆரம்ப சீசனில் இருந்து தற்போது வரை தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன் (Bigg Boss 7 Tamil), கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில், மக்களுக்கு தெரிந்த சில முகங்கள் களமிறங்கினாலும், பலருக்கும் தெரியாத சில டிஜிட்டல் முகங்களும் இதில் போட்டியாளர்களாக நுழைந்தனர். தற்போது இப்போட்டி இறுதிக்கட்டம்நெருங்கி வருவதையொட்டி, முக்கிய போட்டியாளர்கள் என்று கருதப்பட்ட சிலரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு ஏன் வரவில்லை? மன்சூர் அலிகான் கொடுத்த பதில் இதோ!

இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் நடந்துள்ளது:
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்கனவே இந்த இல்லத்தில் 10 பேர் போட்டியாளர்களாக இருந்தனர். அதனால், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதால், தற்போது 8 பேர் எஞ்சியுள்ளனர். இதில், முதல் ஆளாக வெளியேறிவர் ரவீனா தஹா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிறந்த பாேட்டியாளராக விளங்கினார். இந்த நிலையில், 90 நாட்களுக்கு பிறகு, இவர் இப்பாேட்டியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் (Raveena Daha Evicted).

பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் இரண்டாவது ஆளாக வெளியேறியவர், நிக்ஸன். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த இவருக்கு ரசிகர்கள் குறைவான வாக்குகளை அளித்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் (Nixen Evicted). 

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர் தான்:
இந்நிலையில் தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் நபராக பைனலுக்கு தேர்வாகியுள்ளார் விஷ்ணு. இன்னும் 2 வாரங்கள் மீதம் இருக்கும் பட்சத்தில் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதில் நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா மூவரும் இணைந்த பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதில், கண்டிப்பாக பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் கூறுகிறார்கள். அது எப்படி என்ன காரணம் என விசித்ரா கேட்க, அதுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என பூர்ணிமா கூறுகிறார்.

இதோ வைரலாகும் வீடியோ:

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புது படங்கள்! எந்த சேனலில் எதை பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News