ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்து நடிக்க இருக்கிறார்.

Last Updated : Feb 4, 2020, 12:59 PM IST
ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம் title=

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தமிழ் டிவீட்களைப் பதிவு செய்வார். இவரது தமிழ் பதிவுகளுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.

இதைதொடர்ந்து ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Trending News