மேடையில் ஆங்கரிடம் கூல் சுரேஷ் செய்த செயல்.. கடுப்பான மன்சூர் அலிகான்

சரக்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 20, 2023, 10:58 AM IST
  • கூல் சுரேஷின் செய்யல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • மணிப்பு கேட்ட மன்சூர் அலிகான்.
  • வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேடையில் ஆங்கரிடம் கூல் சுரேஷ் செய்த செயல்.. கடுப்பான மன்சூர் அலிகான் title=

சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் தவறாக அநாகரீகம் இல்லாமல் நடந்து கொண்ட சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

சரக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா:
தமிழ் சினிமாவில், முன்னணி வில்லன் நடிகராக பிரபலமான மன்சூர் அலிகான், வில்லன் என்பதை தாண்டி, ஹீரோ, அரசியல்வாதி, காமெடி நடிகர் என தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதி விஜயுடன் இணைந்து, 'லியோ' படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘சரக்கு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் - மகேஷ்.டி, இசை சித்தார்த் விபின், திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், எடிட்டிங் எஸ்.தேவராஜ் ஸ்டண்ட் சில்வா, ஆகியோர் மேற்கொள்கிறார்கள். இந்த படமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திருப்பி போடும் வகையில் இருக்கும் என நேர்காணல் ஒன்றில் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டை பாடாய்படுத்தும் மதுவை வைத்து எடுக்கப்பட்ட புரட்சி படைப்பு தான் சரக்கு படம் எனவும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக கவின்

சரக்கு இசை வெளியீட்டு விழாவில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட கூல் சுரேஷ்:
இந்நிலையில் சரக்கு திரைப் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்போது இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் கூல் சுரேஷூம் (Cool Suresh) அவர்களுடன் இருந்துள்ளார். அப்போது அவர், நேற்று சர்ச்சையான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இந்த சம்பவதிற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அவர், தனது கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கையில் ஒரு மாலையுடன் வந்தார், அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைக் கண்டு தொகுப்பாளினி கடும் கோபமடைந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பத்திரிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

உடனடியாக மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan) நன்றி தெரிவிக்க வந்த போது அவரிடம் ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் கூல் சுரேஷ் இப்படி நடந்துக் கொள்ளலமா? என கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், ‘கூல் சுரேஷ் அப்படி நடந்துக் கொண்டது தவறு தான். அவருக்கான நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறி, கூல் சுரேஷையும் மன்னிப்பு கேட்க அவர் கூறினார். ஆனால் கூல் சுரேஷோ வித்தியாசமான விளக்கம் ஒன்றைக் கொடுத்து, "மன்னிச்சுக்கோ தங்கச்சி" என கூறி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வெகுவாக வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News