புது ஸ்டைலில் மிரட்ட வரும் தனுஷின் ஜகமே தந்திரம்!! வீடியோ!!

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் D40 படத்தின் டைட்டிலே மற்றும் மோஷன் போஸ்டர் 

Last Updated : Feb 19, 2020, 05:19 PM IST
புது ஸ்டைலில் மிரட்ட வரும் தனுஷின் ஜகமே தந்திரம்!!  வீடியோ!! title=

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் D40 படத்தின் டைட்டிலே மற்றும் மோஷன் போஸ்டர் 
வெளியானது. 

பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ஆகவே டி40 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் 19-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டிலே மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.  "ஜகமே தந்திரம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைபடத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. மேலும் இந்த மோஷன் போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

 

Trending News