சிவகார்த்திகேயனின் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான சிவகார்த்திகேயனின் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

Updated: Feb 17, 2020, 12:43 PM IST
சிவகார்த்திகேயனின் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவான சிவகார்த்திகேயனின் டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இந்த வருடம் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனும் இந்த வருடம் தொடக்கத்திலிருந்தே, அயலான் மற்றும் டாக்டர் படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தை முடித்த கையோடு, சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடிக்க கோவா செல்கிறார்.

இந்நிலையில்தான், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. T-சர்ட் - பேன்ட் அணிந்து ஷோபாவில் அமர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவரது இரு கைகளிலும் ரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கிறது. தரையில் அவரைச் சுற்றி ஆபரேஷன் செய்யும் கருவிகளை சிதறிக் கிடக்கின்றன. சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.