வெளியானது கோலிசோடா-2 இரண்டாவது ஆடியோ டீசர்!

Updated: Sep 8, 2017, 06:48 PM IST
வெளியானது கோலிசோடா-2 இரண்டாவது ஆடியோ டீசர்!
Screen Grab (Youtube)

கடந்த 2014-ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `கோலிசோடா'.

`கோலிசோடா' வின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை (கோலிசோடா-2) படக்குழு தயாரித்து வருகிறது.

ரஃப் நோட் படநிறுவனம் இப்படத்தை தயாரிக்க, விஜய் மில்டன் இயக்குகிறார். இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ஆடியோ டீசர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டீசருக்கு இயக்குநர் கவுதம் மேனன் பின்னணி வர்ணனை கொடுத்துள்ளார். கவுதம் மேனனின் கம்பீரமான குரலில் டீசர் அனைவரின் கவதையும் ஈர்த்துள்ளது.