எச்சரிக்கை.... காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்

நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். எனவே, நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2024, 12:12 PM IST
  • நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.
  • சிட்ரஸ் பழங்களை காலை உணவுடன் அல்லது அதற்குப் பின்னர் சாப்பிடுவது நல்லது.
  • சிலவற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
எச்சரிக்கை.... காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள் title=

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உடலுக்கு ஆற்றல் தேவை. அந்த வகையில் நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். எனவே, நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாகவும், உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில், காலையில் எதை சாப்பிட வேண்டும் என்பதை போலவே, எதை சாப்பிடக் கூடாது என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

 சிலவற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தலாம். அல்லது ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக இருக்கலாம். சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால்,  வாயு,  நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் போன்ற செரிமான பிரச்சனைகள் தீவிரமடையும்.

காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது, ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் (Health Tips) நிபுணர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பொரித்த உணவுகள்

காலையில் பூரி அல்லது வடை, பக்கோடா, போண்டா, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடுவது நாள் முழுவதும் மந்தமாக உணரவைக்கும். இதில் அதிக அளவு எண்ணெய் மற்றும் கொழுப்பு இருப்பதால் ஜீரணிக்க கடினமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது அஜீரணத்தை ஏற்படுத்தும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, எனவே, அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும்.  வெறும் வயிற்றில் புளிப்பு சுவை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழங்கள் பழங்கள் அல்லது அவற்றின் சாறு சாப்பிடுவதும் ஆரோக்கியமற்றது. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், இது புண்களை ஏற்படுத்தும். இந்த பழங்களை காலை உணவுடன் அல்லது அதற்குப் பின்னர் சாப்பிடுவது நல்லது.

கார உணவுகள்

காலை உணவில் அதிக அளவு மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை  சேர்த்த உணவுகளை உட்கொள்வது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி அமில உற்பத்தியை அதிகரிக்கின்றன.  இதனுடன், வெறும் வயிற்றில் காரமான உணவுகளை உட்கொள்வது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

மேலும் படிக்க | டீடாக்ஸ் முதல் வெயிட்லாஸ் வரை.... வெறும் வயிற்றில் தனியா நீர் ஏற்படுத்தும் வியக்கத்தக்க மாற்றங்கள்

சாலட்

பச்சைக் காய்கறிகளை அதாவது சாலட்டை வெறும் வயிற்றில் உட்கொண்டால், பக்கவிளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது பொதுவாக வயிற்று வலியை ஏற்படுத்தும், ஏனெனில் இவற்றை ஜீரணிப்பது. கடினம்.

மைதா உணவுகள்

மைதாவில் தயாரிக்கப்பட்ட பிரெட், பரோட்டா போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிக மிக குறைவாகவே உள்ளது.  மறுபுறம், கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை அதிகம் உள்ளது.  இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மேலும், இதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசியை ஏற்படுத்தும்.  

வாழைப்பழம்

வாழைப்பழம் சத்துக்கள் நிறைந்த பழம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இதற்குக் காரணம் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரை, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் கொலஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் முள்ளங்கி இலை... சுவையான ரெஸிபி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News