தமிழில் பல ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி, பின்னர் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அவதாரமெடுத்து தற்போது இயக்குனராகவும், நடிகராகவும் திரைத்துறையில் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவரது 'க்ளப்ல மப்புல' பாடல் இன்று வரை பல ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து வணக்கம் சென்னை படத்தில் அனிரூத் உடன் சேர்ந்து 'நம்ம சென்னை சிட்டி கேங்ஸ்டர்' பாடலை பாடினார். இவருக்கு முதன்முதலாக இயக்குனர் சுந்தர்.சி தனது 'ஆம்பள' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பினை கொடுத்தார். அதன்பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
மேலும் படிக்க | அடுத்த படத்தின் பணியை தொடங்கிய ஹெச்.வினோத்! ஹீரோ யார் தெரியுமா?
தனது பாடல்களின் மூலம் அனைவரையும் கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி 2017-ம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் கதாநாயகன் மட்டுமின்றி இந்த படத்தை அவரே இயக்கியும், இசையமைத்து இருந்தார் மற்றும் இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் தயாரித்து இருந்தார். இந்த படம் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இருந்தது, முதல் படத்திலேயே ஆதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நட்பே துணை, நான் சிரித்தாள் மற்றும் அன்பறிவு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது ஹிப்ஹாப் ஆதி 'வீரன்' எனும் படத்தில் நடித்திருக்கிறார்.
Put a lot of effort into this one. Hope you like it. #Veeran will hit the screen this summer !#VeeranFirstLook #Veeran@hiphoptamizha @ArkSaravan_Dir @athiraraj_1 @deepakdmenon @editor_prasanna @kaaliactor @MaheshMathewMMS @SathyaJyothi pic.twitter.com/TQmOek4BcL
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 20, 2023
'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'வீரன்' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிப்ஹாப் ஆதி இன்றைய தினம் அவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது பிறந்தநாளன்று ட்ரீட் கொடுக்கும் விதமாக படக்குழு 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது. மாஸான கெட்டப்பில் ஆதி இடமபெற்று இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | Review: Unlocked கிரைம் திரில்லர் கொரிய திரைப்பட ரிவ்யூ! திகிலூட்டும் சஸ்பென்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ