வெளியானது ஹ்ரிதிக் ரோஷனின் வேதா ஃபர்ஸ்ட் லுக்!

தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2022, 01:10 PM IST
  • தமிழில் 'விக்ரம் வேதா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டது.
  • ஹ்ரித்திக் ரோஷனின்(48) பிறந்தநாளான இன்றுஅவரது புகைப்படத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியானது ஹ்ரிதிக் ரோஷனின் வேதா ஃபர்ஸ்ட் லுக்! title=

கடந்த 2017-ம் ஆண்டு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி (Vijay sethupathi)நடிப்பில் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா'.  இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர்.  இதில் சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  தமிழில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் செய்ய படக்குழு திட்டமிட்டது.

ALSO READ | நடிகர் சிம்பு - நிதி அகர்வால் விரைவில் திருமணம்?

இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.  இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலிகானும் நடிக்கின்றனர்.  இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷனின்(48) பிறந்தநாளான இன்று (ஜனவரி-10) அவரது புகைப்படத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.  அதில் கருப்பு நிற குர்தா அணிந்துகொண்டு, ரத்தக்கலவையுடன் அதிக தாடி வைத்துக்கொண்டு, aviator சன்க்ளாஸ் அணிந்து கொண்டு மாஸாக காட்சி தருகிறார்.

 

ஹரித்திக்கின் ஃபர்ஸ்ட் லுக்கை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புஷ்கர்-காயத்ரி, அதில்  "@iHrithikக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சியை தந்தது.  இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! வேதாவின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். #VikramVedha செப்டம்பர் 30, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிபெறும்" என்றும் பதிவிட்டுள்ளார்.  இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துபாயில் நிறைவடைந்துவிட்ட நிலையில், சைப் அலிகானை வைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடத்தப்பட்ட்டது.

மேலும் "சிறந்த நடிகர்களான ஹ்ரித்திக் மற்றும் சைப் அலிகானுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.  சிறந்த படக்குழு அமைந்துள்ளது, கண்டிப்பாக நல்லதொரு வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை வழங்குவோம் என்று நம்புகிறோம்" என்று இப்படத்தின் இயக்குனர்கள் கூறியுள்ளனர்.  இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது.  இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே மற்றும் ரோஹித்  சரஃப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | வலிமை ரிலீஸ் தேதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News