மாரி-2 படத்திற்காக பாடல் பாடிய இசைஞானி!

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. 

Last Updated : Jan 16, 2018, 08:12 PM IST
மாரி-2 படத்திற்காக பாடல் பாடிய இசைஞானி! title=

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. 

இதையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் தொடர்ந்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் மாரி 2 அப்டேட்டினை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பாலாஜி மோகனின், மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இப்படத்தின் ஹீரோயினாக "ப்ரேமம்" திரைப்பட புகழ் சாய்பல்லவி மற்றும் வரலக்ஷ்மி களமிரங்குகிறார் என படக்குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Trending News