SeePics: இணையத்தில் வைரலாகும் "காலா" டப்பிங் புகைப்படங்கள்!

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் "காலா" திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் நடிகர் ரஜினி கலந்துக்கொண்ட புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்!

Last Updated : Jan 21, 2018, 05:46 PM IST
SeePics: இணையத்தில் வைரலாகும் "காலா" டப்பிங் புகைப்படங்கள்! title=

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் "காலா" திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் நடிகர் ரஜினி கலந்துக்கொண்ட புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. பின்னர் இரண்டாம் கட்ட படபிடிப்புகள் சென்னையின் பரபரப்பான நடைப்பெற்றது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து வருகிறார். தினமும் 12-15 மணிநேரம் சூட்டிங் பரபரப்பாக நடைப்பெற்றது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது காலா படத்தின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினி கலந்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

 

 

Trending News