MIMI ரீமேக்கில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்!

கடந்த மாதம் ஓடிடியில் வெளியாகி வெற்றியடைந்த மிமி (MIMI)திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 29, 2021, 01:46 PM IST
MIMI ரீமேக்கில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்! title=

Keerthy Suresh தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  2018ம் ஆண்டு வெளிவந்த மகாநதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.   ஹிந்தியில் ஓடிடியில் கடந்த மாதம் வெளியாகி வெற்றியடைந்த படம் மினி.  பணத்திற்காக இன்னொருவரின் குழந்தையை பெற்றுக்கொடுக்கும் வேலையில் ஈடுபடும் நடிகைக்கு ஏற்படும் சிரமங்களைப் பற்றி நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்து இருந்தனர்.  தற்போது இந்த படத்தின் தமிழ், கன்னடம் ,மலையாளம், தெலுங்கு என நான்கு மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   மிமி திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பு இணையத்தில் லீக் ஆனது, இருப்பினும் இப்படம் வெற்றி அடைந்தது

தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார். 

ASLO READ  250 மில்லியன் வியூஸ் கடந்து வாத்தி கம்மிங் சாதனை!

மேலும், பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.   கடந்த 4 மாதங்களாக தனது டீம் உடன் இயற்கையான அழகு சாதன பொருட்களை உருவாக்க உழைத்து வந்ததாகவும், ரோஸ், சந்தனம், ஏலக்காய், குங்குமப்பூ போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு அழகு சாதன பொருட்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பூமித்ரா  அழகு சாதன பொருட்கள் அனைத்துமே கெமிக்கல் மற்றும் தேவையில்லாத வேஸ்ட் இல்லாத, சுத்தமான ஆர்கானிக் பொருட்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News