அடுத்தடுத்த திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க! இன்றைய எபிசோட் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் (செப். 5) குறித்த அப்டேட்களை இங்கு காணலாம்.   

Written by - RK Spark | Last Updated : Sep 5, 2023, 12:14 PM IST
  • விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்.
  • இரவு 9.30 மணிக்கு இது ஒளிபரப்பாகும்.
  • இதனை நீங்கள் Zee5 தளத்திலும் காணலாம்.
அடுத்தடுத்த திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க! இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் கடந்த எபிசோடில் பூஜாவுக்கு ரங்கநாயகி ஹனிமூன் ஏற்பாடு செய்ய, பூஜா வேறு வழியின்றி ரோஹித்துடன் கிளம்பிப் போகிறாள்.  ஹனிமூன் வந்த பூஜா அங்கேயே ரோஹித்தை கொலை செய்ய முடிவெடுக்கிறாள். ஹனிமூன் முடிந்து வருவதற்குள் தங்கள் ஃபர்ஸ்ட் நைட் முடிந்துவிடும் என்று வெற்றி சொல்ல, அதை கேட்கும் பூஜா டென்ஷனாகிறாள். வெற்றி சக்தியை சேர விடக் கூடாது என்று முடிவெடுக்கிறாள்.

மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!

கோவிலில் ஒரு சன்னியாசி சக்தியும் வெற்றியும் வரும் பௌர்ணமிக்குள் ஒன்று சேராவிட்டால் அவர்கள் மண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும் என்று சொல்ல, மீனாட்சி இது விஷயமாக ரங்கநாயகியிடம் பேச முடிவெடுக்கிறாள். ரங்கநாயகி மீனாட்சியின் மேல் கோபத்தில் இருப்பதால், மீனாட்சி பேசும்போது உள்ளே மறைந்திருக்கும் வெற்றி, ரங்கநாயகியின் குரலில், ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சம்மதம் என்று சொல்லி விடுகிறான். இது தெரியாத மீனாட்சி, ரங்கநாயகியே ஒப்புக்கொண்டதாக நினைத்து சக்தி வெற்றியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்கிறாள். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

mp

அதாவது, பூஜா ஹோட்டலில் இருந்து ரோகித்தை மலையை சுற்றி பார்க்கலாமென்று அழைத்துப் போகிறாள். பாசமாக பேசுவது போல் நடிக்கிறாள். ரோகித் பூஜாவிடம் வெற்றி சக்தி விஷயத்தில் தலையிட வேண்டாம் என சொல்கிறான்.  இதனால் பூஜா ரோஹித் மேல் கோபம் ஆவது பின் கோபத்தை மறைத்துக்கொண்டு நல்லவள் போல் நாடகம் போடுகிறாள். மலை உச்சிக்கு சென்றதும் சமயம் பார்த்து ரோகித்தை மலையில் இருந்து தள்ளி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலை எங்கு பார்ப்பது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE-5 இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News