இந்திய சினிமாவில் முதன்முறையாக... மைக் மோகன் திரைப்படம் சாதனை

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக  ரசிகர்கள் கையால் வெளியிட்ட பாடல் இணையதளத்தில், 11 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2022, 10:31 PM IST
  • 'மைக்' மோகன் நடிப்பில் பல ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.
  • இத்திரைப்படத்திற்கு 'ஹரா' என பெயரிடப்பட்டுள்ளது.
  • இப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.
இந்திய சினிமாவில் முதன்முறையாக... மைக் மோகன் திரைப்படம் சாதனை title=

கோயம்புத்தூர் எஸ்.பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், 'பவுடர்' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் முதல் பாடல் கயா முயா வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மோகன் சினிமாவிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை தியாகராய நகரில் அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்த விழாவில் 'ஹரா' படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இவ்விழாவை ஹரா படக்குழு இணைந்து நடத்தியது. 

இந்திய சினிமா வரலாற்றில் ரசிகர்களால் பாடலை வெளியிட்டது இதுவே முதல் முறை என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். நேற்று முன்தினம் (அக். 8)வெளியாகி 13 லட்சம் பார்வைகளை கடந்து பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மோகன் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

மேலும் படிக்க | நான் ஏன் மைக் மோகன் ஆனேன்?... மோகன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

விரைவில் வெளிவரவிருக்கும் 'பவுடர்' படத்தின் கதையின் நாயகனும், மக்கள் தொடர்பாளருமான நிகில் முருகன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசை அமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி, மற்றும் மோகன் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஹரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாகவும், தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் கோவை எஸ் பி மோகன் ராஜ் தெரிவித்தார். ஹரா படத்தில் குஷ்பு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாருஹாசன், மனோபாலா, ஜெயக்குமார் மற்றும் ஏராளமான நடிகர்கள் நடிக்க, இப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. 

பள்ளியில் படிக்கும் போதிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ஹரா படத்தின் முக்கிய கரு என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிலிம்பேர் விருதுகள் 2022 - யார் யாருக்கு என்ன என்ன விருது? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News