அடுத்தடுதத்து சர்ச்சையில் சிக்கும் இராவண கோட்டம்.. போராட்டத்தில் குதிக்கும் சாதிய அமைப்பினர்?

Raavana Kottam Controversy: தென் மாவட்டங்களில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள இராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Shiva Murugesan | Last Updated : May 11, 2023, 03:47 PM IST
  • மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் இராவண கோட்டம்.
  • முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்
  • இராவண கோட்டம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை
அடுத்தடுதத்து சர்ச்சையில் சிக்கும் இராவண கோட்டம்.. போராட்டத்தில் குதிக்கும் சாதிய அமைப்பினர்? title=

இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்திருக்கும் இராவண கோட்டம் படம் சாதி ரீதியிலான சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் இராவண கோட்டம். ராவண கோட்டம் திறப்படம் நாளை (மே 12, வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்துள்ளார்.

ராமநாதபுரத்தை கதைக்களமாக கொண்டு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த படத்தில்,  சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தவறான கருத்துக்கள் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க - திரையரங்கம் & ஓடிடி... இந்த வாரம் வெளியாகும் முக்கிய படங்கள் என்னென்ன?

மேலும் படத்தில் 1957-ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கீழத்தூவல் கலவரம் பற்றியும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தை வெளியிட தடை கோரி சாதி அமைப்பினர் சிலர் முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளனர். 

அதில் 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சீமை கருவேல மரங்களின் விதைகள் விமானம் மூலமாக தூவப்பட்டதாகவும், அதனால் தான் இந்தியா முழுவதும் இது போன்ற சீமை கருவேல மரங்கள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காமராஜர் ஆட்சி காலத்தில் வெல்லம் தயாரிப்பதற்கு விறகு தேவை என்பதற்காக சீமை கருவேல மரங்களின் விதைகள் தூவப்பட்டதாக தவறாக காட்டி இருப்பதாகவும் புகாரில் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க - பாகுபலிக்கு வந்த மோசமான விமர்சனங்கள்... முதன்முதலாக கவலையை பகிர்ந்த ராஜமௌலி!

இந்நிலையில் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை வெளியிடக் கூடாது என சாதி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், தியேட்டர்களில் இராவண கோட்டம் படத்தை திரையிட்டால் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் சாதி அமைப்பினர் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இராவண கோட்டம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இயக்குநர் விக்ரம் சுகுமாரனும், நடிகர் சாந்தனுவும் இந்த படம் எந்தவொரு இனத்தையும், சாதியையும் காயப்படுத்துவில்லை. சாதிக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இந்த படத்தின் மூலம் சமூகச் செய்தியை எடுத்துச் சென்றிருப்பதாகவும் விளக்கம் அளித்தனர்.

ஆனால் மீண்டும் இராவண கோட்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையால் பட வெளியீட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், படம் நாளை (மே 12) வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க - ‘ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த கௌதம் வாசுதேவ் மேனன்..அதுவும் இந்த கேரக்டருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News