ஸ்டார்களின் படங்கள் தீபாவளியில் ரிலீஸ் ஆகும். ஆனால் சூப்பர் ஸ்டார் படம் ரிலீசாகும் நாளெல்லாம் தீபாவளிதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஒரு ஆளுமை. அவரது பட ரிலீசுக்காக எப்போதும் மக்கள் காத்திருக்கின்றனர்.
ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த (Annaatthe) படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மக்களிடம் அதிகமான எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ள படங்களில் ஒன்றாகும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் தன் நடிப்பால் நீங்கா இடம் பெற்றுள்ளார் ரஜினி. 100 கோடி 200 கோடி வசூல் என்பது அவருக்கு கை வந்த கலை.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு கேட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: தங்கள் சம்பளத்தை 30 சதவீதம் விட்டுக் கொடுங்கள்; நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
சூப்பர் ஸ்டாரே கதை கேட்டால் சும்மாவா? புதையல் தன்னை தேடி வந்தது போலானதாம் அந்த இயக்குனருக்கு!! உடனடியாக ரஜினிக்கான கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. அயராமல் உழைத்து தற்போது ரஜினிக்கான ஒரு தனித்துவமான கதையை தயார் செய்து விட்டாராம் இயக்குனர். ரஜியின் அபாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பதாகவும், விரைவிலேயே ரஜினியிடம் சென்று கதையை அவர் சொல்லப்போவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கதை ஓகே ஆகிவிட்டால், அண்ணாத்த படம் முடிந்த பிறகு, சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் படமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. எப்படி இருந்தாலும், அடுத்த படத்திற்கான பேச்சுகள் துவங்கி விட்டாலே, ரஜினி ரசிகர்கள் (Rajini Fans) மகிழ்ச்சியடையந்து விடுவார்கள். நீண்ட இடைவெளியாக இருந்தாலும், ரஜினி படம் அவ்வப்போது வந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஆசை.
இதற்கிடையில் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. தான் முழு நேர அரசியலுக்கு வந்துவிட்டதாக ரஜினி அறிவித்து விட்டாலும், அதன் பிறகு அவர் தரப்பிலிருந்து இது குறித்த எந்த வித நடவடிகையும் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்துகொண்டிருந்தால், அவரது அரசியல் பிரவேசமும், மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் என்னாவது என்றும் ஒரு பிரிவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ALSO READ: கொலுக்காக வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு நேரத்தை வழங்கிய இந்த பாடகி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR