மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி!

கஜோல் ஹீரோயினாக நடிக்கும் 'தி லாஸ்ட் ஹுர்ரா' திரைப்படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2021, 08:40 PM IST
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி! title=

கஜோல் ஹீரோயினாக நடிக்கும் 'தி லாஸ்ட் ஹுர்ரா' திரைப்படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார்.   இது குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் இந்தப் படம், சுஜாதா என்கிற தாயின் போராட்டங்களை, அவள் எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால் இணைந்து பிலைவ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.  நடிகை ரேவதி 2002-ம் ஆண்டு இயக்கிய ’மித்ர மை ஃப்ரெண்ட்’ திரைப்படம் தேசிய விருது பெற்றது. 2004-ம் ஆண்டு இயக்கிய ’ஃபிர் மிலேங்கே’ திரைப்படமும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. 

kaj

தற்போது இந்த சுஜாதா கதாபாத்திரத்தில் நடிக்க கஜோலே சரியான தேர்வாக இருப்பார் என்று ரேவதி நன்பிக்கை தெரிவித்துள்ளார். "தி லாஸ்ட் ஹுர்ராவில் சுஜாதாவின் பயணம் என் இதயத்துக்கு நெருக்கமானது. என்னால் புரிந்து கொள்ள முடிவதோடு, எனக்கு உத்வேகத்தையும் தரக்கூடியது. நானும் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்த போது கஜோல் தான் எங்கள் மனசில் முதலில் வந்தார். அவளது மென்மையான, துடிப்பான கண்களும், அழகான புன்னகையும், எதுவும் சாத்தியம் என்று உங்களை நம்பவைக்கும். அதுதான் சுஜாதா கதாபாத்திரமும் கூட. இந்த கூட்டணியில், கஜோலுடன் ஒரு மனதைத் தொடும் கதையைச் சொல்வதில் ஆர்வமாக இருக்கிறேன்" என்று ரேவதி கூறியுள்ளார்.

இந்த அழகிய பயணம் அனைவருக்கும் பகிரப்பட வேண்டிய ஒன்று என்றும், ரேவதி படத்தை இயக்குவது தனக்கு அதிக நம்பிக்கையைத் தருவதாகவும் கஜோல் கூறியுள்ளார்.

 

ALSO READ 3Yearsof96 : 96 படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News