புதிய கெட்டப்பில் கலக்கும் சமந்தா -புகைப்படம் உள்ளே!

புதிய கெட்டப்பில் கலக்கும் சமந்தா-வின் ஸ்மார்ட் லுக் புகைப்படம் உள்ளே..! 

Updated: Apr 14, 2018, 12:43 PM IST
புதிய கெட்டப்பில் கலக்கும் சமந்தா -புகைப்படம் உள்ளே!
Pic Courtesy: Samantha Akkineni (instagram).

சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் தேஜா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான படம் ரங்கஸ்தலம். இந்தப் படம், தெலுங்கில் பயங்கர ஹிட்டானது. 

தெலுங்கில் பாகுபலி-யை அடுத்து அதிக வசூல் ஈட்டிய படம் இது தான். ரங்கஸ்தலம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.இந்தப் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இப்பட விழாவில் கலந்து கொண்ட சமந்தா. படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த விழாவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் சமந்தா வந்துள்ளார். தனது தலை முடியை ஸ்டைலாக குறைத்து வெட்டியிருந்தார். அதுமட்டுமன்றி அவர் விழாவிற்கு சேலை கட்டி வந்திருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் மூழ்கினர்.  

இது அவர் நடிக்கும் யு-டர்ன் பட ரீமேக்-கான கெட்டப் என்று சிலர் கூறி வருகின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. பவன் குமார் இயக்கும் இந்தப் படத்தில் ஆதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். பூமிகா, நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...! 

 

 

When my heart took over and smiled for me  #chaylove  #strengthlikenoother #madeforme God

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on