தமிழ் சினிமாவில் இந்த வாரமும் நிறைய படங்கள் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை, வினோத் இயக்கத்தில் கொட்டுக்காலி போன்ற படங்கள் வெளியாகி உள்ளது. இதனுடன் பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி ஜி விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள சாலா படமும் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் எஸ்டி மணிபால் இந்த படத்தை இயக்க தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ் வினோத், ஸ்ரீநாத், அருள்தாஸ், சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். சாலா படத்திற்கு ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசையமைத்துள்ளார். புவன் எடிட்டிங், வைரபாலன் கலை மற்றும் மகேஷ் மேத்யூ & ரக்கர்ராம் ஸ்டண்ட் பணிகளை மேற்கொண்டுள்ளனர். படத்தின் ட்ரைலர் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது.
ஒரு சண்டையின் போது சிறுவயதில் ஹீரோ தீரன் அருள்தாஸின் உயிரை காப்பாற்றுகிறார். உடனே தீரனை தத்தெடுத்து வளர்க்கிறார். அருள்தாஸின் எதிரி சார்லஸ் வினோத் இவரின் பார்வதி பார் உரிமையை கைப்பற்றுகிறார். தான் இழந்த பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக உள்ளது. ஹீரோ சாலா வளர்ந்து தனது குருவிற்காக பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார். மறுபுறம் மது விற்பனையை எதிர்க்கும் சமூக ஆர்வலரான ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளார். மதுவை எதிர்த்துப் போராடுவது மட்டுமின்றி அனாதை குழந்தைகளுக்கு ஆதரவாகவும் ரேஷ்மா செயல்படுகிறார். இது சாலாவை ஈர்த்துவிட இறுதியில் யார் பக்கம் நிற்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் எஸ்டி மணிபால்.
தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு சமூகத்திற்கு தேவையான கதையை துணிச்சலாக சொல்லி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்டி மணிபால். படத்தில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவர தரவுகள், வசனங்கள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ரேஷ்மா வெங்கடேஷ் கதாபாத்திரம் நன்கு எழுதப்பட்டு இருந்தது. அதற்கேற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ரேஷ்மா வெங்கடேஷ். அவரது நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மறுபுறம் ஹீரோ தீரன் சாலா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். உடல் ரீதிராக அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்துக்கு நன்கு பொறுத்தியுள்ளார். ஆக்சன் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நல்ல பெர்பாமன்ஸ் கொடுத்துள்ளார். மேலும் சார்லஸ் வினோத், அருள் தாஸ், சம்பத் ராம் போன்ற துணை நடிகர்களும் அந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றனர்.
படம் முழுக்க இடம் பெற்று இருந்த நகைச்சுவையும் ஓர் அளவிற்கு ஒர்க் ஆகி உள்ளது. இவை படத்தின் மையக்கருவை பாதிப்படைய விடாமல் இடம் பெற்று இருந்தது. மேலும் ஆங்காங்கே இடம் பெற்று இருந்த சஸ்பென்ஸும் நல்ல விதத்தில் ஒர்க் ஆகி உள்ளது. இருப்பினும், ஒரு சில காட்சிகள் நம்மை சோதிக்கிறது. இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருந்து இருக்கலாம் என்ற உணர்வை தருகிறது. திரைக்கதையிலும் சில பிரச்சனைகள் உள்ளது. அதுதவிர முக்கிய காட்சிகளில் நடிகர்களின் நடிப்பும் சற்று நன்றாக இருந்து இருக்கலாம். சமூகத்திற்கு தேவையான ஒரு கதையை ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கொண்டு கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர். படத்தில் சில சிக்கல்கள் மற்றும் அதிகப்படியான வன்முறை இருந்தபோதிலும் நல்ல ஒரு கமர்சியல் படமாக வந்துள்ளது சாலா.
மேலும் படிக்க | சரத்குமாரும் இல்லை..சிம்புவும் இல்லை..‘இவர்’தான் பிக்பாஸ் 8 தொகுப்பாளரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ