சரத்குமாரும் இல்லை..சிம்புவும் இல்லை..‘இவர்’தான் பிக்பாஸ் 8 தொகுப்பாளரா?

Bigg Boss 8 Tamil New Host : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யார் தொகுத்து வழங்குவது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 11, 2024, 10:35 AM IST
  • பிக்பாஸில் இருந்து வெளியேறிய கமல்
  • புது ஹோஸ்ட் யார்?
  • இந்த நடிகர் தானாம்!
சரத்குமாரும் இல்லை..சிம்புவும் இல்லை..‘இவர்’தான் பிக்பாஸ் 8 தொகுப்பாளரா?  title=

Bigg Boss 8 Tamil New Host : தமிழ் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் வெளியான இந்த நிகழ்ச்சியை, இந்தி மொழியில்தான் முதலில் ஆரம்பித்தனர். இந்தியில் பல சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி, தமிழில் இப்போதுதான் 8வது சீசனை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு சீசனும் புதுப்புது சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் கிளப்ப, அதற்கு ஏற்றார் போல அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களும் கூடுவர்.  பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஹிட் ஆவதற்கு காரணமாக இருந்தவர், அதை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன். 

திடீர் அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்:

கோலிவுட்டில் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிசியான மற்றும் பெரிய நடிகராக வலம் வருபவர், கமல்ஹாசன். 69 வயதிலும் பட வேலைகளில் விரும்பி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் அவர், இதற்கு இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். கடந்த சீசனில் போட்டியாளர்கள் சந்தித்ததை விட, பல சர்ச்சைகளை சந்தித்தார் கமல். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென தான் பிக்பாஸில் இருந்து விலகுவதாகவும் இதுவரை தனக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறினார்.

கமல், நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு காரணம், அவர் பல படங்களில் கமிட் ஆனதுதான் என்று தெரிவிக்கப்பட்டது. கமல், கைவசம் பல படங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது அனைவரது பார்வையும் அடுத்த தொகுப்பாளர் யார்? என்பதை பற்றிதான் இருக்கிறது. 

பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை..

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க இருப்பது என்பது குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது. இதில், தாெகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, பல பிரபலங்களின் பெயர் அடிப்பட்டது. நடிகர் சிம்பு, ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

மேலும் படிக்க | பிக் பாஸ் 8 பிரம்மாண்ட அப்டேட்.. இவர்களே இந்த சீசனின் போட்டியார்கள்

இது, ஓரளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. அதே போல நடிகை ரம்யா கிருஷ்ணனும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனை சில நாட்கள் தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் கெஸ்ட் ஹோஸ்டாக வந்தார். இதனால், இவரும் பிக்பாஸ் 8ஐ தாெகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது. 

சில நாட்களுக்கு முன்னர், நடிகரும் அரசியல் பிரபலமும் ஆன சரத்குமார், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக கூறப்பட்டது. அது கிட்டத்தட்ட கன்ஃபார்மே ஆகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட பெயர், சூர்யா. ஏற்கனவே “நீங்களும் வெல்லாம் ஒரு கோடி” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நன்றாக கையாள்வார் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், இப்போது புதிதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. 

புது ஹோஸ்ட் இவர்தானா? 

அந்த புதிய ஹோஸ்டாக கூறப்படுபவர் வேறு யாருமில்லை, விஜய் சேதுபதிதான். இவர், ஏற்கனவே ஒரு சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். ஆனால், அவரும் தமிழ் மொழி மட்டுமன்றி பிறமொழிகளிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட பெயர் இவருடையதுதான் என கூறப்படுகிறது. எனவே இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது குறித்து நம்ப முடியாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8 தொடங்குவது எப்போது? தொகுப்பாளர் யார்? போட்டியாளர்கள் யார்? விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News