3 வேடங்களில் சிவகார்த்திகேயன்!! முகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

Updated: Feb 14, 2020, 04:15 PM IST
3 வேடங்களில் சிவகார்த்திகேயன்!! முகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமானார். இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தை குறித்து அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது அது என்னவென்றால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.