அயன் பட லுக்கில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஃபர்ஸ்ட் லுக்!

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

Last Updated : Nov 10, 2019, 04:31 PM IST
அயன் பட லுக்கில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஃபர்ஸ்ட் லுக்!

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

சூர்யா நடிப்பில் வெளியான NGK மற்றும் காப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய GR.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கதாபாத்திம் ஒன்றில் நடித்துள்ளார்.

GV.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சூரரைப்போற்று ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ள நிலையில் #SooraraiPottruFirstLook என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார், மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யா ‘மாறா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. 

 

More Stories

Trending News