Why We Should Not Grow Nails In Right : உடலில் நாம் வெட்ட வெட்ட வளரும் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று முடி, இன்னொன்று நகம். ஆனால் இவை இரண்டையும் வெட்டுவதற்கும் வெட்டாமல் விடுவதற்கும் பெரியவர்கள் பலர் நேரம்-காலங்களை குறிப்பர். நம்மில் பெரும்பாலானோர் இடது விரல்களில்தான் அதிகமாக நகம் வளர்த்திருப்போம். வலது கைகளில் இருக்கும் நகங்கள் ஒன்று குட்டியாக இருக்கும் இல்லையென்றால் ஒட்ட வெட்டியது போல இருக்கும். அதிலும் சிலர், மிகவும் திறமையாக நகம் உடையாமல் அதனை வளர்த்திருப்பர். ஆனால், வலது கைகளில் நாம் நகம் வளர்க்க கூடாது. இதனால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா?
சுகாதாரம்:
நாம் எந்த கையில் நீளமாக நகம் வளர்த்தாலும், அதில் அழுக்குகள் எளிதாக புகுந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இதனால், தேவையற்ற நோய் தொற்றுகள் உடலில் பரவுவதுடன், அது பிறருக்கும் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. பெரும்பாலானோருக்கு வலது கையில் சாப்பிடும் பழக்கம் இருக்கும். எனவே, சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, நாம் எப்பாேதும் அதிகம் பயன்படுத்தாத கையில் மட்டும் நகம் வளர்த்துக்கொள்வது நல்லது. அது மட்டுமன்றி, அந்த அழுக்கினால் சளி, ஜுரம் உள்ளிட்ட பிரச்சனைகளும் உண்டாகலாம்.
தினசரி பயன்பாடு:
நாம், பெரும்பாலும் வலது கையைதான் அனைத்திற்கும் பயன்படுத்துவோம். வலது கையில் நகம் வளர்த்தால் டைப் செய்வது, எழுதுவது, ஏதேனும் ஒரு வேலையை செய்ய பொருளை உபயோகிப்பது, கையில் எதையேனும் வைத்துக்கொள்ள என அனைத்திற்கும் பிரச்சனையாகி விடும். நகம் இருந்தால் இதையெல்லாம் செய்ய அசௌகரியமாகவும் இருக்கும்.
பராமரிப்பு:
நகத்தை குட்டியாக வைத்திருந்தால், நாம் அதை சுத்தப்படுத்தவும் பாதுகாப்பாக உடையாமல் பார்த்துக்கொள்ளவும் எளிமையாக இருக்கும். வலது கையில் நகம் வளர்க்கும் போது, அந்த கையை நாம் அனைத்திற்கும் உபயோகிக்கையில் நகம் உடையவும், சமமாக வளராமல் போகவும் வழி வகுக்கவும்.
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு:
நீளமாக நகம் வளர்த்திருந்தால், பல சமயங்களில் நாம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் தெரியாமல் காயப்படுத்தி விடுவோம். இது, சிறிய அளவிலான காயங்களை ஏற்படுத்தி உடலில் ஆங்காங்கே எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, வலது கையில் கொஞ்சம் குறைவாக நகம் வளர்த்துக்கொள்வது நல்லது.
அழகு:
பலர், நகத்தை அதிகமாக வளர்த்திருந்தால் அதனை அழகாகவோ அல்லது நளினமாகவோ பிறர் பார்ப்பதில்லை. குறிப்பாக வேலை செய்யும் இடத்தில், தலைமை அதிகாரியாக இருப்பவர்கள் வலது கையில் நகம் வளர்த்திருந்தால் அது அவர்களின் வேலைக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கும். எனவே, உங்கள் தொழிலில் பிறர் மத்தியில் நல்ல பெயரை எடுக்க, வலது கையில் சிறிதளவு நகத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கும் உள்ளதா? இந்த வித கடுமையான நோய்கள் வரலாம்!
நகம் உடையாமல் இருக்கும்:
பலர், ஆசை ஆசையாக நகம் வளர்ப்பர். ஆனால், எதிர்பாராத விதமாக அது உடைந்து விட்டால் மனமே புண்பட்டு விடும். அது மட்டுமன்றி, வேகமாக நகம் உடைந்து விட்டால் அது காயத்தையும் ஏற்படுத்தும். எனவே, இதனை தடுக்க, வலது கையில் நகம் வளர்க்காமல் இருப்பது நல்லது.
தனிப்பட்ட வசதி:
வலது கை பழக்கம் உடையவர்கள் சமைப்பது, சாப்பிடுவது, இசைக்கருவிகளை வாசிப்பது என அனைத்திற்கும் வசதியாக இருப்பது வலது கை ஒன்றாக மட்டுமே இருக்கும். இந்த கையில் அதிக நகம் இருந்தால் பல சமயங்களில் எந்த வேலை செய்யவும் அசெளகரியமாக இருக்கும். எனவே, இந்த கையில் நகத்தை குட்டியாக அல்லது இல்லாமலேயே வைத்துக்கொண்டால் எந்த வேலை செய்வதற்கும் வசதியாக இருக்கும்.
மேலும் படிக்க | இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது? ஆன்மிகம் கூறும் பதில் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ