பிரமாண்டமாக தயாராகி வரும் "சைரா நரசிம்ம ரெட்டி" பட டீசர் வெளியீடு

மிகப்பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாராகி வரும் "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 20, 2019, 08:13 PM IST
பிரமாண்டமாக தயாராகி வரும் "சைரா நரசிம்ம ரெட்டி" பட டீசர் வெளியீடு
Pic Courtesy : Youtube Grab

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்தரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் "சைரா நரசிம்ம ரெட்டி" இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கிறார். 

மிகப்பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாராகி வரும், இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தின் டீசர், இன்று வெளியிடப்பட்டது. அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.