அடி வயிறு தொப்பையை அசால்டாக குறைக்கும் வாழை தண்டு ஜூஸ்..!

Belly Fat, Banana stem juice | அடிவயிறு தொப்பையை குறைக்க வாழைத்தண்டு ஜூஸ் சுமார் 1 ஒருமாதம் குடித்து வந்தாலே போதும். வாழை தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 21, 2024, 10:13 AM IST
  • வாழைத்தண்டு ஜூஸ் நன்மைகள்
  • அடி வயிறு தொப்பை சீக்கிரம் குறையும்
  • நார்ச்சத்து மிக்கது, கொழுப்பு கரையும்
அடி வயிறு தொப்பையை அசால்டாக குறைக்கும் வாழை தண்டு ஜூஸ்..! title=

Belly Fat, Banana stem juice Benefits Tamil | ’வெயிட் லாஸ் செய்ய என்ன செய்ய வேண்டும்?’, ’எடை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்?’, சீக்கிரம் எடை குறைய டிப்ஸ் என்ன? என்பதை தான் அதிகமானோர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. அதற்கு முதலில் உடல் ஏன் அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே உடல் எடையை அசால்டாக எப்படி குறைப்பது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். பின்னர், வாழைத்தண்டு ஜூஸ் மூலம் உடல் எடை மற்றும் அடிவயிறு தொப்பையை எப்படி குறைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். 

உடல் எடை அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணம் மோசமான வாழ்க்கை முறையே ஆகும். பிஸியான வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வதே இல்லை, வீட்டு உணவுகளை தவிர்த்து பெரும்பாலும் கடை உணவுகளையே உண்பது ஆகியவையே உடல் எடை அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணம். உடல் எடை அதிகரிக்கும்போது கூடவே பல கடுமையான வாழ்வியல் நோய்களும் சேர்ந்தே வந்துவிடுகின்றன. தொப்பை கொழுப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் உடல் எடை அதிகரிக்கும்போது வரும். இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் உடல் எடையை சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வழியாக மட்டுமே குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க குறுக்கு வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். 

மேலும் படிக்க | Weight Loss Yoga: அதிக கலோரிகளை எரித்து... கொழுப்பை கரைக்கும் சூப்பர் யோகாசனங்கள்

உடல் எடையை குறைக்க வாழைத் தண்டு ஜூஸ்

உடல் எடையை குறைக்க இருக்கும் பல வகையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழங்கங்களில் வாழைத்தண்டு ஜூஸூம் ஒன்று. வாழைப்பழத்தைப் போலவே வாழைத்தண்டு ஜூஸிலும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலோனோர் வாழைத்தண்டு ஜூஸ் அதிகம் குடிப்பத்தில்லை. அதைப் பற்றிய தகவலையும் தெரிந்து வைத்திருப்பதில்லை. உடல் பருமனை குறைக்கும் மந்திரம் வாழைத்தண்டு ஜூஸில் இருக்கிறது. இது கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க வைக்கிறது. 

வாழைத்தண்டில் இருக்கும் சத்துக்கள்

இரண்டு வகையான நார்ச்சத்துகள் வாழைத் தண்டில் காணப்படுகின்றன. முதலாவது கரையக்கூடியது மற்றும் இரண்டாவது கரையாதது. இந்த இரண்டு சத்துக்களும் இணைந்து வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இது உங்கள் உடலை அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. இது தவிர, நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. நீண்ட நேரம் உங்களை நிறைவாக வைத்திருந்து பசி எடுப்பதை குறைக்கிறது. இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டியிருக்காது. இதன் மூலம் தினமும் நீங்கள் உட்கொள்ளும் தினசரி கலோரி எண்ணிக்கை குறைகிறது. இது உடல் பருமனை குறைக்க வழிவகை செய்கிறது. இது தவிர வாழைத்தண்டு சாறு உடலில் உள்ள நச்சுத்தன்மை அகற்ற உதவுகிறது, இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

வாழைத்தண்டு ஜூஸ் செய்வது எப்படி?

வாழை தண்டை நன்கு கழுவி அதன் மேல் உள்ள கடினமான பகுதியை அகற்றவும். அதாவது, நீங்கள் தண்டின் வெளிப்புற அடுக்கை உரிக்க வேண்டும். அதன்பின்னர், வாழைத் தணடை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஜூஸரில் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் அந்த ஜூஸை எடுத்து வடிக்கட்டியில் வடிக்கட்டிவிட்டு, சிறிது உப்பு சேர்த்து, விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். இப்போது ஜூஸ் ரெடி குடிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள், ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் தலைமுடி சார்ந்த நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுகளை நீக்கி டீடாக்ஸ் செய்யும் ஆரோக்கியமான பழங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News