பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம்?

Last Updated : Oct 10, 2017, 10:34 AM IST
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம்? title=

தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.

தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்ப்பு படம் `அர்ஜுன் ரெட்டி'. இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

`அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் துருவ் ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகி யார் என்பது குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது.

 

 

`அர்ஜுன் ரெட்டி' படத்தில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரை படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News