2021-ல் தியேட்டரில் Blockbuster ஹிட் அடித்த 4 திரைப்படங்கள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு தியேட்டர்களில் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 4 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2021, 01:46 PM IST
2021-ல் தியேட்டரில் Blockbuster ஹிட் அடித்த 4 திரைப்படங்கள்

1. மாஸ்டர்

உலகளவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த திரைத்துறையே முடங்கியது. அதனை நம்பியிருந்த சினிமா தொழிலாளர்களும், விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடுமையான சவாலை எதிர்கொண்டனர். இதனால், திரைத்துறை மீண்டும் எப்போது எழுச்சி பெறும் என காத்திருந்த அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதியில் நல்ல செய்தி கிடைத்தது. ’இளைய தளபதி’ நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக தியேட்டர்களில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரசிகர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வருமா? என்ற கேள்வியுடன் இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸானவுடன் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி, மெகாஹிட் கொடுத்த படமாகும் மாறியது. 

ALSO READ | 'மாநாடு' படத்தில் நடிக்க இருந்த விஜய்! கைவிட்டு போனது ஏன்?

2. கர்ணன்

நடிகர் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான ’கர்ணன்’ ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. கொடியன்குளம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற கர்ணன், பாக்ஸ் ஆஃபீஸிலும் ஹிட் அடித்தது. 

3. டாக்டர்

விஜய், தனுஷ் ஆகியோரின் படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய ‘டாக்டர்’ திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஒரு சேர இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனை கரைசேர்த்தது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டால் உற்சாகமடைந்த சிவகார்த்திகேயன், இதற்காக ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

ALSO READ | சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி

4. மாநாடு

நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாநாடு திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. மிகப்பெரிய சிக்கலுக்கு நடுவே இப்படம் வெளியானது. கடைசி நாள் காலை வரை படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற பரபரப்புடனேயே திரையரங்குகளில் வெளியான படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. டைம் லூப் கதையை, இயக்குநர் வெங்கட்பிரபு சூப்பராக டெலிவரி செய்திருக்கிறார். ரசிகர்களிடம் கிடைத்த ஆதரவால் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் பட்டையை கிளப்பியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே வெளியான இந்த 4 திரைப்படங்களும் அடித்த ஹிட்டால் ஒட்டுமொத்த திரையுலகமும், நம்பிக்கை பாதைக்கு திரும்பியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News