ரவுடியா? கோச்சா? மாஸ் காட்டும் விஜய்; வெளியானது பிகில் படத்தின் ட்ரைலர்..!!

"பிகில்" படத்தின் ட்ரைலர் வெளியானதை அடுத்து, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகின்றனர். #BigilTrailer ஹாஸ்டாக் டிரெண்ட்ங் செய்து வருகின்றனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 12, 2019, 06:07 PM IST
ரவுடியா? கோச்சா? மாஸ் காட்டும் விஜய்; வெளியானது பிகில் படத்தின் ட்ரைலர்..!! title=

புதுடெல்லி: காத்திருந்த தளபதியின் ரசிகர்களுக்கு இன்ப மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று "அட்லி" இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "பிகில்". இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில் இன்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. "பிகில்" படத்தின் ட்ரைலர் வெளியானதை அடுத்து, விஜய்-ன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட்ங் செய்து வருகின்றனர். 

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்க போட்டு போட்டது. ரசிகர்களின் நீண்ட கோரிக்கைக்கு பிறகு, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக "பிகில்" படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபர் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) "பிகில்" படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று, அவர்கள் சொன்னதை போலவே இன்று மலை 6 மணிக்கு "பிகில்" ட்ரைலர் வெளியானது. 

 

அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இசை ஏ.ஆர்.ரகுமான் அமைத்துள்ளார். 

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஜய் பேசியது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதாவது ஆளும் கட்சியினர் வைத்த பேனர் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதை மேற்கோள் காட்டி பேசிய விஜய், "யார் மீது பழி கூற வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் எனக் கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News