"வேலைக்காரன்" படத்தின் அடுத்த சாதனை!

Last Updated : Sep 2, 2017, 04:29 PM IST
"வேலைக்காரன்" படத்தின் அடுத்த சாதனை! title=

"வேலைக்காரன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "கருதவெல்லாம் கலீஜாம்" பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.!

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடிகின்றார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், அனிருத் இசையில் படத்தில் இருந்து சிங்கிள் டிராக் "கருதவெல்லாம் கலீஜாம்" பாடல் ஆகஸ்ட் 29 அன்று மாலை 6 மணிக்கு வெளியானது. தற்போது இந்த பாடல் இணையத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. இப்பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி பயணித்து வருகிறது.

Trending News