இந்த வீக் எண்ட் என்ன பார்க்கலாம்..? புது ஓடிடி பட ரிலீஸ்கள் இதாே..!

This Week OTT Releases: இந்த வாரம் புதிதாக எந்த தளத்தில் என்னென்ன படங்களை பார்க்கலாம்? ஓடிடி படங்கள் மற்றும் தொடர்களின் ரிலீஸ் லிஸ்ட் இதோ..! 

Written by - Yuvashree | Last Updated : Sep 22, 2023, 10:41 AM IST
  • வாரா வாரம் புதுப்புது படங்கள் ஓடிடியில் வெளியாவது வாடிக்கை.
  • தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகின்றன.
  • இந்த வீக் எண்ட் என்ன பார்க்கலாம்? முழு விவரம் இதோ.
இந்த வீக் எண்ட் என்ன பார்க்கலாம்..? புது ஓடிடி பட ரிலீஸ்கள் இதாே..!  title=

வாரா வாரம், திரையரங்குகளில் படங்கள் வெளிவருகிறதோ இல்லையோ, ஓடிடி தளங்களில் தவறாமல் பல படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவை பொருத்த வரை நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், ஜீ 5 உள்ளிட்ட பல ஓடிடி தளங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன. இந்த தளங்களில் சில படங்கள் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ஒரு சில படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அனைத்து வாரங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் புதுப்புது படங்களும் தொடர்களும் வெளியாவது வழக்கம். அப்படி இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களை காணலாம் வாங்க.

டை நோ சர்ஸ்:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளுக்கு பஞ்சமே இருக்காது. அப்படி சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த படம், டை நோ சர்ஸ். ஆக்ஷன் பாணியில் உருவாகியிருந்த இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை குடும்பத்தினருடன் அமர்ந்து ஓடிடியில் காணலாம். 

சஸ்பெக்ட் எக்ஸ்:

கரீனா கபூர், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சஸ்பெக்ட் எக்ஸ். காப்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது. க்ரைம் பட கதைகளை விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக ஓடிடியில் பார்க்கலாம். 

தி ப்ளாக் புக்:

காணாமல் பாேன தனது மகனை கண்டு பிடிக்க ஒரு தந்தை போராடும் படம்தான், தி ப்ளாக் புக். இந்த படத்தில் ரிச்சர்ட், சாம் டிடி உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர். ஆங்கில படமான இது, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | '3 idiots' படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

செக்ஸ் எஜுக்கேஷன்:

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஆங்கில தொடர்களுள் ஒன்று, செக்ஸ் எஜுக்கேஷன். இந்த தொடரில், பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவத்தினரிடையே நிகழும் பாலியல் குறித்த சந்தேகங்கள், அவர்களின் பாலியல் வாழ்க்கை உள்ளிட்டவை கதையாக எழுதப்பட்டுள்ளன. காமெடி, காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களை இந்த தொடர் உள்ளடக்கியுள்ளது. இந்த தொடரின் நான்காவது சீசன் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 

அதிதி:

பேய்-மர்மம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது, அதிதி. தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்த தொடரில் கேசவ் தீபக், காயத்ரி, வெங்கடேஷ் கக்கமனு உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த தொடர், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. பேய் கதைகளை பிடித்தவர்கள் இந்த தொடரை கண்டிப்பாக வீக் எண்டில் பார்க்கலாம். 

ஸ்பை கிட்ஸ்:ஆர்மகெடான்

ஹாலிவுட் சீரிஸ் படங்களில் உலகம் முழுவதும் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள படம், ஸ்பை கிட்ஸ். 90ஸ் குழந்தைகள் இந்த படம் குறித்து நன்கு அறிவர். இளம் உளவாளிகள் குறித்த கதை இது. வெவ்வேறு நடிகர்களுடன் இந்த படம் இயக்கப்பட்டு வந்தது. இப்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்பை கிட்ஸ்: ஆர்மகெடான் என்ற பெயரில் தொடராக உருவாகியுள்ளது. இந்த தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் குழந்தைகளுடன் வார இறுதியில் பார்க்கலாம். 

பிற படங்கள்:

மேற் கூறியவை மட்டுமன்றி, மேலும் பல படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளிவர இருக்கின்றன. அவை என்னென்ன? 

>காந்தீவதாரி அர்ஜுனா-தெலுங்கு-நெட்ஃப்ளிக்ஸ்
>மேன்சன் 24-தெலுங்கு-ஹாட்ஸ்டார்
>அசோகா சீசன் 1-ஆங்கிலம்-ஹாட்ஸ்டார்
>வாய்ஸ் ஆஃப் சத்யானந்தம்-மலையாளம்-சிம்ப்ளி சவுத்
>சாங் ஆஃப் தி பண்டிட்ஸ்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ்
>தி செயிண்ட் ஆஃப் செகண்ட் சான்சஸ்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்

மேலும் படிக்க | ‘குஷி’ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்போது ரிலீஸ்..? முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News