இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 திரைப்படங்கள்!

ஓடிடியில் கடந்த வாரம் அதிக படங்கள் வந்ததை தொடர்ந்து, இந்த வாரம் சில முக்கிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 22, 2022, 12:44 PM IST
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 திரைப்படங்கள்! title=

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'மாமனிதன்'.  இந்த படத்தை YSR ப்ரொடக்ஷன் பேனரின் கீழ் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருக்கிறார்.  இந்த படத்தில் காயத்ரி, கே.பி.ஏ.சி.லலிதா, குரு சோமசுந்தரம், அனிகா, மானஸ்வி, சரவணா சக்தி, கஞ்சா கருப்பு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படத்தின் வெற்றிக்கு பின்னர் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணி இந்த படத்தில் இணைந்திருக்கிறது.  இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து  இப்படம் ஜூன்-24ம் தேதி வெளியாகுகிறது.

maamanithan

மேலும் படிக்க | என்னுடைய அடுத்த படம் இப்படித்தான் இருக்கும் - லோகேஷ் கனகராஜ்!

பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி ஆகியோரது நடிப்பில் வெளியாகவுள்ள த்ரில்லிங் திரைப்படம் 'பட்டாம்பூச்சி'.   இந்த படத்தில் ஜெய் ஒரு சைக்கோ கொலைகாரனாகவும், சுந்தர்.சி போலீசாகவும் நடிக்கிறார்.  இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் ஹனி ரோஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.   ஜூன்-24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  

pattampoochi

அடுத்ததாக கிஷோர் என் இயக்கத்தில் சிபிராஜ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரது நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'மாயோன்'.  இளையராஜா இசையமைத்து இருக்கும் இந்த படம் ஜூன்-24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  அறிமுக இயக்குனர் சந்தீப் ஷாம் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'வேழம்'.  இப்படத்தில் ஜனனி, ஐஸ்வர்யா மேனன் மற்றும் சந்தீப் ஆகியோர்  நடித்துள்ளனர்.  இந்த படமும் வரும் ஜூன்-24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் 'போலாமா ஊர்கோலம்'.  கஜசிம்ஹா மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வட சென்னையில் நடந்த உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.  இப்படத்தில் 20 கால்பந்தாட்ட வீரர்கள் நடித்திருக்கின்றனர்.  இந்த படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் பீஸ்ட் ஆகா தளபதி விஜய் திகழ்வதற்கு காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News