ஸ்பைடர் இசை ஆல்பம் வெளியானது!!

Last Updated : Sep 9, 2017, 06:26 PM IST
ஸ்பைடர் இசை ஆல்பம் வெளியானது!! title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் இசை இன்று கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது இந்த திரைப்படத்தினை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைபடத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்பொழுது ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.

Trending News