மெர்சல் டீசர்: செப்டம்பர் 21-ம் தேதி ‘மெர்சல் அர்சன் வாரான்’!!

Last Updated : Sep 17, 2017, 11:35 AM IST
மெர்சல் டீசர்: செப்டம்பர் 21-ம் தேதி ‘மெர்சல் அர்சன் வாரான்’!! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில், மெர்சல் படத்தின் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குநர் அட்லீயின் பிறந்த நாளன செப்டம்பர் 21-ம் தேதி, மெர்சல் படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Trending News