மறைந்த நண்பனின் மகளுக்கு தந்தையாக நின்ற வின் டீசல்!

தன் நண்பன் பால் வாக்கரின் மகள் திருமணத்தில் தந்தையாக நின்றார் வின் டீசல்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 23, 2021, 05:28 PM IST
மறைந்த நண்பனின் மகளுக்கு தந்தையாக நின்ற வின் டீசல்!

Fast and Furious படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பால் வாக்கர்.  இவர் Fast and Furious திரைப்படத்தின் முதல் 6 பாகங்களில் வின் டீசலுடன் இணைந்து நடித்தார்.  2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் நடிகர் பால் வாக்கர் மரணமடைந்தார்.  அப்போது அவருக்கு வயது 40 மட்டுமே.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மறைந்த நடிகர் பால் வாக்கரின் 22 வயது மகளும் மாடலுமான மீடோ வாக்கர் (Meadow Walker) இந்த மாத தொடக்கத்தில் டொமினிகன் குடியரசில் நடிகர் லூயிஸ் தோர்ன்டன்-ஆலனை ( Louis Thornton-Allan) திருமணம் செய்துகொண்டார்.  கடந்த வெள்ளிக்கிழமை, மீடோ வாக்கர் (Meadow Walker) தனது திருமண விழாவின் புகைப்படங்களைப் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.  இந்த திருமணத்திற்கு வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.  மீடோ வாக்கரின் திருமண புகைப்படத்தில், வின் டீசல் அவரின் வலது புறத்தில் நடந்து செல்கிறார்.  வழக்கமாக, மணமகளின் தந்தைதான் அவ்வாறு சேர்ந்து நடந்து செல்வார்.  தனது நண்பனின் மகளுக்கு தந்தையாக நின்று திருமணம் செய்து வைத்த பாலிவுட் நடிகர் வின் டீசல்க்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.    

 

 

 

திருமணத்தில் வின் டீசல் மட்டும்இன்றி பால் வாக்கருடன் இணைந்து நடித்த  ஜோர்டானா ப்ரூஸ்டருக்கும்  (Jordana Brewster) கலந்து கொண்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மீடோ வாக்கர் தனது தந்தையின் நினைவாக Fast and Furious 9 பிரீமியரில் சிவப்பு கம்பள வரவேற்பில் (RED CARPET) கலந்து கொண்டார்.

ALSO READ இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 8 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News