‘விவேகம்’ படத்தின் சர்வைவா பாடல் வெளியானது!!

Last Updated : Jun 20, 2017, 10:49 AM IST
‘விவேகம்’ படத்தின் சர்வைவா பாடல் வெளியானது!! title=

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் சர்வைவா பாடலின் ஃபுல் வெர்ஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் காஜல் அகர்வால், பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘சர்வைவா’ பாடலின் முழு வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் மற்றும் யோகி பி இருவரும் பாடியிருகிறார்கள். 

இந்த ‘சர்வைவா’ பாடல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது. சில நாள்களுக்கு முன்புதான் அனிருத் ட்விட்டரில் ‘சர்வைவா’ பாடலின் டீசரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News