ஈராக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்ந்தது: வைகோவுக்கு அமைச்சகம் விளக்கம்

ஈராக்கில் சிக்கிய இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வை.கோ-வுக்கு அயல் உறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 1, 2022, 03:47 PM IST
  • ஈராக்கில் சிக்கிய இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது.
  • வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்தது.
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வை.கோ-வுக்கு அயல் உறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஈராக்கில் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்ந்தது: வைகோவுக்கு அமைச்சகம் விளக்கம் title=

ஈராக்கில் சிக்கிய இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வை.கோ-வுக்கு அயல் உறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க, தலைமைக் கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘அயல்உறவுத்துறை துணைச் செயலாளர் அருண்குமார், இன்று (01.06.2022) காலையில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் நாள், அயல் உறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு, நீங்கள் ஒரு கடிதம் எழுதி இருந்தீர்கள்.

தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், ஈராக் நாட்டின் கர்பலாவில் மேற்கொண்டுள்ள  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 7500 இந்தியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுள் 2000 பேர் தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனம் நீட்டித்த போதிலும், ஈராக் நாடு விசா நீட்டிப்பு தரவில்லை.   

அவர்களுடைய கடவுச் சீட்டுகளில், ‘Departure only’ என்ற முத்திரையைக் குத்தினர். இந்த முத்திரை இருந்தால், அதன்பிறகு, அவர்கள், துபாய், கத்தார் அல்லது வளைகுடாவில் வேறு நாடுகளுக்குச் செல்ல முடியாது.

எனவே, இது குறித்து ஈராக் அரசுடன் பேசி, பிரச்சினையைத் தீர்க்குமாறு தாங்கள் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள். 

இதுகுறித்து, அமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்கள். தொழிலாளர்களுடைய பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டு விட்டது. 

இனி அவர்கள் வளைகுடாவில் வேறு நாடுகளுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பயணிகள் ஹேப்பி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பால் மகிழ்ச்சி 

மேலும் படிக்க | வெளிநாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலையா? இந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம் 

மேலும் படிக்க | யாழ்ப்பாண நூலக எரிப்பின் 41வது நினைவு தினம்; அஞ்சலி செலுத்திய பொது மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News