சரும மேம்பாட்டிற்கு உதவும் 5 உணவுகள்!

கோடைகாலத்தில் சரும பாதுகாப்பிற்கு கொலாஜன் அதிகம் நிறைந்த உணவு பொருட்கள் உதவுகின்றன.

 

1 /5

குடைமிளகாயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், மற்றும் பல மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன, இது சரும பராமரிப்பிற்கு உதவுகிறது.  இதிலுள்ள கேப்சாய்சின் என்கிற வேதிப்பொருள் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது.  

2 /5

கோழியிலுள்ள அதிகமான அமினோ அமிலங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது.  கோழி இறைச்சியில் கொலாஜன் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன, மேலும் இது மூட்டு சம்மந்தமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.  

3 /5

எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் அதிக ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.    

4 /5

பச்சை காய்கறிகளில், குறிப்பாக ஸ்பினாச் மற்றும் லெட்டியூஸ் போன்ற பச்சை கீரை வகைகள் உடலுக்கு அதிகளவில் ஊட்டச்சத்துக்களை தருகின்றன.  இதில் நிறைந்துள்ள குளோரோபில் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  

5 /5

மீன்களில் அமினோ அமிலங்கள், ஜிங் மற்றும் காப்பர் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன, இது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.  மேலும் மீனில் உள்ள நல்ல கொழுப்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.