ஜோதிட சாஸ்திரப்படி, நிழல் கிரகங்களான ராகு-கேது இரண்டும் சேர்ந்து ராசியை மாற்றுகின்றன. ஏப்ரல் 12, 2022 அன்று ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றின. ராகு-கேதுவின் இந்த மாற்றத்தால் 5 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த 5 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ராகு-கேதுவின் பெயர்ச்சி காதல் அல்லது திருமண உறவுகளில் சிரமங்களுக்கு வழிவகுக்கும். இது தவிர, நிதி பிரச்சனைகளும் வாழ்க்கையில் வரலாம்.
துலா ராசிக்கு ராகுவால் தொல்லைகள் உண்டாகும். இந்த ராசிக்காரர்கள் பணம் மற்றும் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், ஜாதகத்தில் ராகு-கேது சுப ஸ்தானத்தில் இருந்தால், சுப பலன்களைப் பெறலாம்.
ராகு-கேதுவின் இந்த பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமற்றதாக இருக்கும். இந்த காலத்தில், மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கவலையும் இருக்கக்கூடும். மேலும், இந்த நேரத்தில் பண பரிவர்த்தனைகள் மற்றும் நிதி விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் இந்த முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கேதுவின் சஞ்சாரம் ஓரளவுக்கு சாதகமாக அமையும். ஆனால், ராகுவின் சஞ்சாரம் சாதகமாக கருதப்படவில்லை. ராகுவின் சஞ்சாரத்தால் மகர ராசிக்காரர்கள் குடும்பப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கலாம். இது தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமற்றதாக இருக்கும். ராகு-கேதுவின் சஞ்சாரத்தின் போது பண இழப்பு ஏற்படக்கூடும். இது தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். மனக் கவலை மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)